இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் ஆகியவை முழுமையாக செயல்பட அனுமதியளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.