பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்று செய்திகளில் பார்த்தேன்.... என்ன பண்ண போறீங்க? வானதி கேள்வி!!  

பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்று அதனை குறைக்க தமிழக அரசு என்ன செய்ய போகிறார்கள்?  என வானதி ஸ்ரீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்று செய்திகளில் பார்த்தேன்.... என்ன பண்ண போறீங்க? வானதி கேள்வி!!   

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து கோவைக்கு திரும்பிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போழுது டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் அதை பத்தி ஒரு வார்த்தைகூட ஆளுநர் உரையில் இல்லை என குற்றச்சாட்டினார்.

 முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கேட்ட பிறகும், முதல்வர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் தராதது ஏமாற்றம் அளிக்கின்றது என்றும் கோவை மக்களின் எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் ஆக்கப்பூர்வமான வாக்குறுதியை திமுக தராதது ஏமாற்றமாக இருக்கிறது என்றார்,

 பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்று செய்திகளில் பார்த்தேன். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு ஒரே மாதிரிதான் பெட்ரோல் டீசல் கொடுக்கின்றனர். ஆனால், மாநில அரசின் வரி எவ்வளவு? அதை குறைக்க இவங்க என்ன செய்ய போகிறார்கள்? அதை பற்றியும் அறிவிப்பு ஒன்றுமே  இல்லை என கூறிய வானதி சீனிவாசன், மாநில அரசாங்க வரியில் விலையை குறைக்கிறோம் என்று  அப்போ வாக்குறுதி தந்துவிட்டு, இப்போ பேசாதது ஏன் என கேள்வி எழுப்பினார். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் குறித்து தவறான தகவல்களை சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 சட்டசபைக்கென்று மரபு, விதிகள் இருக்கிறது. அமைச்சர்கள் உள்ளிட்ட அங்கு ஒரு சிலரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச கையை உயர்த்தினேன். ஆனால், சபாநாயகர் எனக்கு நேரம் கொடுக்கவே இல்லை, எங்கள் உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் இருந்தன என பேசினார்.

 எங்க கருத்தையும் சொல்வதற்கும் சட்டமன்றத்தில் இடம் தர வேண்டும் என பேசிய வானதி சட்டமன்றத்திற்கு நான் புதுசு என்பதால், எதிர்வினையாற்றவில்லை அதனாலதான் எங்களுடைய கருத்துகளை ஊடகங்களிடம் சொல்கிறோம் என்றார்.

 கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன் கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் பொதுவானது என்றார். பிரதமர் மோடியை பற்றி திமுக முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர். பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், முதலில் அந்த பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும் என வானதி சீனிவாசன் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com