கிரிக்கெட் ரசிகர்களின் குறையை பெட்ரோல் விலை நீக்கி விட்டது-ப.சிதம்பரம் கிண்டல்

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கி விட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  
கிரிக்கெட் ரசிகர்களின் குறையை பெட்ரோல் விலை நீக்கி விட்டது-ப.சிதம்பரம் கிண்டல்
Published on: 
Updated on: 
1 min read

பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை  தாண்டியதாகவும், கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 75 டாலர் என இருக்கும் போது ஏன் இந்த நிலை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரை தாண்டியது என்றும், ஆனாலும் பெட்ரோல் விலை 65 ரூபாயை தாண்டவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ள ப.சிதம்பரம், இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை என கடுமையாக சாடியுள்ளார்.

இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர மற்றும் ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது என்றும், மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள்தோறும் அனுபவித்து வருவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com