ராணிப்பேட்டையில் பைப் லைன் உடைந்து ...  பல ஆயிரம் லிட்டர் குடிநீர்  வீண்...!

ராணிப்பேட்டையில் பைப் லைன் உடைந்து ... பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்...!

Published on

ஒகேனக்கல் காவேரி ஆற்றிலிருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்குள் குழாய் மூலம் குடி தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது அதில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு வேலூர் ஆற்காடு வழியாக பாலாற்றில் குடிதண்ணீர் ராட்சத குழாய் ஒன்று பாலாற்றில் புதைத்து கொண்டு செல்லப்படுகிறது..

இந்த நிலையில்  ராணிப்பேட்டை மாவட்டம்   ஆற்காடு அருகே உள்ள பாலாற்றில் நடுவே குடிதண்ணீர் 
பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் அப்பகுதியில் தண்ணீர் பெரிய அளவில் குட்டையாய் தேங்கி குடி தண்ணீர் மளமளவென பொங்கி வெளியேறி காணப்படுவதால் சிறுவர்கள் பலர் உடைப்பு ஏற்பட்டிருக்கும் குடிதண்ணீரில் குளிப்பதனால் எந்த நேரத்தில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக காண்போரை அச்சப்பட வைக்கின்றது..

எனவே பாலாற்றில் நடுவே புதைக்கப்பட்டுள்ள பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் மணமளவென பொங்கி தண்ணீர் வெளியேறி வருகிறது இந்த பைப் லைன் உடைப்பு ஏற்பட்ட காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால் இதன் மீது துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக உடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com