வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி? திரையரங்குகளுக்கும் 100% அனுமதி..?

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா நிலவரம் மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் கொரோனா 3ஆவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு எச்சரித்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, திருவிழாக்கள், அரசியல், சமூக மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையானது அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.