முப்பெரும் விழாவில் திமுகவை சாடிய பிரேமலதா!

சென்னை தாம்பரத்தில் தேமுதிக சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது

முப்பெரும் விழாவில் திமுகவை சாடிய பிரேமலதா!

தாம்பரத்தில் தேமுதிக முப்பெரும்m விழாவில் பேசிய பிரேமலதா. தேமுதிகவை தவிர  அனைத்து கட்சிகளும் பணம், சோறு, புடவை கொடுத்து தான் கூட்டத்தை கூட்டுவதாக குற்றம் சாட்டினார்

முப்பெரும் விழா

தாம்பரத்தில் செங்கல்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சி 18 ஆம் ஆண்டு  தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேர்த்து தேமுதிகவின் முப்பெரும்  விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன் பிரபாகரன், நடிகர் மயில்சாமி ஆகியோர் கலந்து  கொண்டு உரையாற்றினர். ஏழை எளிய மக்களுக்கு தையல் மெஷின்கள் மற்றும் உதவித் தொகையை வழங்கினார்கள். இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஊழல் பணத்தில் விழாவா?

தேமுதிகாவை தவிர அனைத்து கட்சிகளும் பணம், சோறு, வண்டி, புடவை கொடுத்து தான் கூட்டத்தை கூட்டுவதாகவும்,அதே நேரத்தில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாவில் விளக்குகள் ஜொலித்ததாகவும் ,அது லஞ்சம் ஊழல் செய்த காசில்தான்  ஜொலிப்பதாக  பிரேமலதா விமர்சனம் செய்தார்.

எடப்பாடி பழமிச்சாமியை விமர்சித்த பிரபாகரன்

பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இருக்கிறாரா  என்று கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும், பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கியம் என அனைத்து சீட்டுகளையும் வழங்கினார்கள். ஆனால் இன்று உங்கள் நிலைமை என்ன என்று பாருங்கள். தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை என்று கூறிய  உங்களுக்கு தான் பக்குவம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தார் விஜய.பிரபாகரன்.