குடியரசு தலைவர் கன்னியாகுமரி வருகை : சுற்றுலா பயணிகளுக்கு தடை

குடியரசு தலைவர்  கன்னியாகுமரி வருகை : சுற்றுலா பயணிகளுக்கு தடை
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரிக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தருவதை ஒட்டி நாளை கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்துள்ளனர்,இந்நிலையில் போலீசார் குடியரசு தலைவர் வருகின்ற பாதையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை 18ம் தேதி கன்னியாகுமரிக்கு ஒரு நாள் பயணமாக வருகை தர இருக்கிறார் அவர் நாளை பகல் 12 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 12:30 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார், அங்கிருந்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிடும் அவர்,மேலும் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திரத்துக்கும் செல்கிறார்.

அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சிக்கூடம் மற்றும் பாரதமாதா சிலையை பார்வையிடுகிறார் பின்னர் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார் இந்நிலையில் குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, மேலும் நாளை கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, குடியரசு தலைவரின் பாதுகாப்பு கருதி நாளை கடற்கரை மற்றும் கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கன்னியாகுமரியில் இருந்து செல்லும் வரை சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரை மற்றும் முக்கிய சந்திப்புகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அதேபோன்று ட்ரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதித்துள்ளனர் இந்நிலையில் போலீசார் அங்கு உள்ள கடைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com