குடியரசு தலைவர் தேர்தல்: அரசு கொஞ்சம் ஸ்பீடா இருந்திருக்கலாம் - வாக்களிப்புக்கு பிறகு இபிஎஸ் பேட்டி!

குடியரசு தலைவர் தேர்தல்: அரசு கொஞ்சம் ஸ்பீடா இருந்திருக்கலாம் - வாக்களிப்புக்கு பிறகு இபிஎஸ் பேட்டி!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காத திமுக அரசு வெட்கி தலை குனியவேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடக்கம்:

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி இன்று நாடு முழுவதும் 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டப்பேரவையில் காலை முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இபிஎஸ் வாக்களிப்பு:

புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவைக்கு வந்து வாக்களித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி:

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார். மாணவி இறப்பு குறித்து அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்திருந்தால் இவ்வளவு பெரிய வன்முறையை தவிர்த்து இருந்திருக்கலாம் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com