தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி! - அண்ணாமலை

Published on

தமிழ்நாடு அரசு மீது குற்றம் சாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், 6 முறை ஆட்சியில் இருந்த திமுகவினர், 5 மருத்துவ கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, இதில், திமுகவின் பங்களிப்பு மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com