
பாகுபலி காட்டு யானையை நான்காவது நாளாக தேடிவரும் வன த்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றித் திரியும் பாகுபலி என்னும் ஒற்றை ஆண் காட்டு யானையின் வாய்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலத்த காயத்துக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, பாகுபலி காட்டியறைக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காயம் அடைந்த பாகுபலி யானையின் நடமாட்டத்தை கடந்த மூன்று நாட்களாக வளத்துறையினர் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணித்து வந்தாலும் பாகுபலி யானை, ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து நகர்ந்தபடி இடம் மாறிக் கொண்டே இருப்பதால் அதற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
சுற்றி வளைத்து ஓர் இடத்தில் நிறுத்தி, அதற்கு மயக்க ஊசி செலுத்த முதுமலை முகாமிலிருந்து வசீம் மற்றும் விஜய் என இரண்டு யானைகள் வரவழைக்கப்பட்டு, தற்போது அந்த கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் அரசு வனத்துறை மரக்கிடங்கு பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக யானையை பிடிக்க முடியாமல் இருந்து வந்த நிலையிலும் இன்று நான்காவது நாளாக பாகுபாலி யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதற்காக நான்கு மருத்துவ குழுவினர் வனப்பகுதிக்குள் சென்று வனப் பணியாளர்களுடன் சேர்ந்து பாகுபலி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
யானை சமவெளி பகுதிக்கு வந்தவுடன் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பாகுபலி யானை வனத்துறை மற்றும் மருத்துவக் குழுவினருக்கும் போக்கு காட்டி வருகின்றது.
இதன் காரணமாக யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வனதுறையினர் தவித்து வருகின்றனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பாகுபலி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.