மீன் பிடிக்க டோக்கன் வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடி அனுமதிச்சீட்டு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக கடலோர பகுதியில் 60 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு, மீன்பிடி அனுமதிச்சீட்டு இன்று வழங்கப்படாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள்
தொடர்ந்து, கடல் பகுதியில் தற்போது சீற்றம் இல்லாமல் இருப்பதால் மீன் பிடிப்பதற்கான டோக்கன் வழங்க வலியுறுத்தி மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.