காவிரி விவகாரம் : அதிமுக சாா்பில் நாளை ஆா்ப்பாட்டம்...!

காவிரி விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அதிமுக சாா்பில் நாளை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீா் திறந்துவிட மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், கருகிய நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க திமுக அரசை வலியுறுத்தியும், அதிமுக சாா்பில் திருவாரூா், நாகை, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய டெல்டா மாவட்டங்களில் அக்டோபா் 6-ம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி கடந்த திங்கட்கிழமை தொிவித்திருந்தாா்.

அதன்படி, காவிரி விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அதிமுக சாா்பில் நாளை காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com