நாங்கள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் மீண்டெழுவோம்.! பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியை பேச்சு.! 

நாங்கள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் மீண்டெழுவோம்.! பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியை பேச்சு.! 

பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த பாலியல் சம்பவங்கள் தமிழகத்தையே  அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து பொதுமக்களும்,பல்வேறு பிரபலங்களும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்த பள்ளி நிர்வாகம் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் பற்றி அந்த பள்ளியில் இசை ஆசிரியையாக இருக்கும் அம்மு என்பவர் அந்த பள்ளி விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசும் போது "பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி என்பது, எனக்கு முக்கிய அடையாளம். காரணம், நான் பாலா மந்திர் என்ற அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். அனாதை இல்லங்கள், ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே ஆதரவற்றோரை வைத்திருக்க முடியும். அதற்கான நேரம் வந்த போது, நான் பட்டப் படிப்பை கூட முடிக்கவில்லை. இசைத் திறமை மட்டும் இருந்தது. அதை மட்டுமே நம்பி, மூன்று பள்ளிகளில், இசை ஆசிரியை பணிக்கான நேர்காணலில் பங்கேற்றேன். என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் என, நம்பினேன்; பாடக்கூட வாய்ப்பு வழங்கவில்லை. அப்போது, எனக்கு வேலையோ, அங்கீகாரமோ இல்லாததால், நான் மிகவும் விரக்தி அடைந்திருந்தேன். நான் ஒரு பிராமணப் பெண் இல்லை என்றாலும், பிஎஸ்பிபி. , பள்ளி நேர்காணலுக்கு சென்றேன்; பாடினேன்; வேலை கிடைத்தது. 


அந்த நாள், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்த நாள். நான், பிஎஸ்பிபி.,யின் இசை ஆசிரியர் என்பது தான் எனக்கான அங்கீகாரம்; அடையாளம் எல்லாமே. அது ஒரு பள்ளி மட்டுமல்ல; வாழ்வின் தொடர் முன்னேற்றத்துக்கான இடம். அந்த பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர். அதனால் தான், அங்கிருந்து ஒரு இளங்கலை, இரண்டு முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற முடிந்தது. 


அது மட்டுமல்ல; என் மொழிபுலமையும், தன்னம்பிக்கையும், தற்போது பலமடங்கு கூடியுள்ளது. நான், இந்த பள்ளியில், 13 ஆண்டுகளில், எனக்கான ஒரு இடத்தை அடைந்துள்ளேன். இந்தபள்ளியின் ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் இந்த நிலை தான் என்பது உண்மை. தற்போதுள்ள சோதனையான காலகட்டத்தை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இணைந்து எதிர்கொள்வோம். நம்பிக்கையுடன் மீண்டெழுவோம்" எனக் கூறியுள்ளார்.