ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை, தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பப்ஜி விளையாட்டை யூடியூபில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணம் சம்பாதித்து வந்த யூடியூபர் மதன், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாக கூறி குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனிடையே தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை எனக்கோரி மதன் ஜாமீன் மனு விண்ணப்பித்திருந்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அதில் விசாரணை முழுமையாக முடிவடையாததால், தற்போது மதனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.