வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட முதல் தமிழ் யூடியூப் சேனல் இன்று பெருமையை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல். 

புதுக்கோட்டையை சேர்ந்த இந்த குழு ஒவ்வொரு முறையும் கிலோ கணக்கில் சமைத்து, அதை அங்கிருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறது. 

யூ டியூப் மூலம் பல லட்சங்களை சம்பாதித்த இவர்கள் தற்போது ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த இந்த குழு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், “வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்த உயரத்திற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசுக்கு கொரோனா நிவாரணமாக தங்களது பங்களிப்பை அளித்ததற்கும் வாழ்த்துக்கள். மீண்டும் உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com