அதிகாலையிலேயே சென்னையை குளிர்வித்த மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகாலையிலேயே சென்னையை குளிர்வித்த மழை - மக்கள் மகிழ்ச்சி
Published on
Updated on
1 min read

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர், செங்குன்றம், புழல், மாதவரம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவல்லிகேணி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நீர்நிலைகளும் படிப்படியாக நிரம்பி வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com