மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்…  

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்…   

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னையில் ஒரு சில பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  தமிழக கடலோரப் பகுதிகளில்  பலத்த காற்று வீசும் என்பதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் என[வ அறிவுறுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com