உச்சகட்ட பாதுகாப்பில் ராஜ்பவன் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்!

Published on
Updated on
1 min read

இரண்டு அடுக்கு பாதுகாப்பு, மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

சென்னைக்கு 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த  ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வரவேற்றனர்.

பின்னர் ராஜ் பவனில் ஜனாதிபதி தங்கியுள்ள நிலையில் காலை 9  மணியில் இருந்து 9:30 மணி வரை, ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன் பின்பு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு நடக்கும் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் காலை 10:15 முதல் 11:15 வரை கலந்து கொள்கிறார்.

அதன் பின்பு காரில் புறப்படும் குடியரசு தலைவர், பகல் 11:55 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு குடியரசு தலைவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு விழா நடக்கிறது. அதன்பின்பு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தன்னுடைய இரண்டு நாள் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, பகல் 12:05 மணிக்கு‌, இந்திய விமானப்படை தனி விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் காவல்துறை அதிகாரிகள் தலைமையிலான காவலர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் 

ஏற்கனேவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் வேற எந்தவொரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உச்சகட்ட பாதுகாப்பில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றானர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com