
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு வந்த கடைகள், தற்போது, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், முழு ஊரடங்கின் போது அமைக்கப்பட்ட நடமாடும் காய்கறி மற்றும் மளிகை கடைகளும் இயங்கி வருவதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதை எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.