அந்த பசு கூறியது,” மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள். அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சற்று முன் தேரில் வந்த இளவரசர் நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று என் மனம் திருப்தியடைந்திருக்கும். ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ் வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார். நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று பசு முறையிட்டது.