கிருஷ்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற ரத யாத்திரை!!!!

கிருஷ்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற ரத யாத்திரை!!!!

பெரம்பூரில்  கிருஷ்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற ரத யாத்திரையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும், கிருஷ்ண பரமாத்மாவின் மகிமைகளை பரப்ப, அகில உலக கிருஷ்ண  பக்தி இயக்கம் என்ற இஸ்கான் அமைப்பு 2015 ல் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த அமைப்பை உருவாக்கிய இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியா ஸ்ரீல பிரபு பாதருக்கு அர்ப்பணிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்  14-ஆம் தேதி இஸ்கான் வடசென்னை சார்பில் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஒன்பதாவது வருட ஸ்ரீ கௌர நிதாய்  ரத யாத்திரை விழா நடைபெற்றது.

மாலை 4 மணி அளவில் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக பெரம்பூர் பாரதி சாலையில் தொடங்கும் ரத யாத்திரை  பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி சிக்னல், ரெட்ஹில்ஸ் சாலை வழியாக யாத்திரை சென்றது  இந்த ரத யாத்திரையில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வடம் பிடித்து ரதத்தை இழுத்து  யாத்திரையில் பங்கேற்றனர் மேலும் "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" என்று கிருஷ்ணர் புகழ் பாடியபடியே முக்கிய வீதிகளில் யாத்திரையாக சென்றனர் 

பின்னர் இந்த யாத்திரை யானது லட்சுமிபுரத்தில் உள்ள பத்மஸ்ரீ சேஷ மகளை மாலை ஆறு முப்பது மணி அளவில் சென்றடைந்தது. ரத யாத்திரையில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் பாடல்கள் பாடியும் நடனமாடியும் தங்கள் பக்தியினை வெளிப்படுத்தினர். பின்னர் பத்ம   ஶ்ரீ சேஷ மஹாலில் நடைபெற்ற சொற்பொழிவிழும் அதன் பின்னர் அரங்கேற்றப்பட்ட அஜாமிலன் நாடக அரங்கேற்றத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com