
அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணியுடன் இணைந்து பல்வேறு ஊழலில் ஈடுபட்ட மாவட்ட பதிவாளர் சிவப்பிரியாவை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதிமுக ஆட்சி காலத்தில், விருகம்பாக்கத்தில், சார் பதிவாளராக பணியாற்றியவர் சிவப்ரியா. அப்போதைய அதிமுக அமைச்சர் வீரமணியுடன் இணைந்து பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சட்டப்பட்டார். அரசுக்கு சொந்தமான 44 நிலங்களை தனி நபர்களுக்கு பதிவு செய்து பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அவரை விசாரணை செய்து பின்னர், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டது. விசாரணையில், அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை தவறாக தனி நபருக்கு பதிவு செய்து கொடுத்ததாக உறுதி செவியப்பட்டதன் அடிப்படையில், அரசுக்கு இழப்பீடு செய்த மாவட்ட பதிவாளர் சிவப்பிரியாவை பணியிடைநீக்கம் செய்தது தமிழ் நாடு அரசு.
அதன்பேரில், சிவப்பிரியா மீது விசாரணை நடத்தப்பட்டு 5 ஆண்டுகலமாக பணியிடை நீக்கத்தில் இருந்தவர், தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.