சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்!

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, நாகை மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை வந்தனர்

இதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவால் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்த அவர்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.