தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மழை பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளதாகக் கூறினார்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் 43 சதவீதம் அளவுக்கு வடகிழக்குப் பருவமழை குறைந்துள்ளதாகவும், சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.