இணைய தள சேவை இல்லை...அனைத்து பகுதிகளிலும் உதவி மையம் அமைக்க கோாிக்கை...!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல் முறையீடு செய்ய அனைத்து பகுதிகளிலும் உதவி மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது. அதன்படி, மகளிர் உரிமைத்தொகைக்கு தேர்வான பயனாளர்களின் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. 

அதேசமயம், மகளிர் உரிமைத் தொகை  திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகாிக்கப்பட்டவா்கள் மேல் முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு சாா்பில், உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையம் மற்றும் இ- சேவை மையத்தில் இணைய தள சேவை இல்லாததால் பெண்கள் சிரமம் அடைந்தனா். இதனால் அனைத்து பகுதிகளிலும் இலவச உதவி மையங்களை அமைக்க வேண்டும் என்று அவா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com