கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை: விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் - செந்தில்பாலாஜி

கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை: விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் - செந்தில்பாலாஜி

கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
Published on

கரூர் நகராட்சியில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் சபைக் கூட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கரூர் நகரில் பேருந்து கட்டும் தொழில், வீட்டு உபயோக பொருட்கள், கொசுவலை உற்பத்தி மற்றும் ஜவுளி உற்பத்தி ஆகியவை சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர், இதனால், கரூரை மாநகராட்சி யாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் எனவும் எதிர்பார்ப்பதாக கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com