ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பணிகள் குறித்து ஆராய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தேசிய துப்புரவு பணியாளர் வாரிய தலைவர் வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். 

ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பணிகள் குறித்து ஆராய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தேசிய துப்புரவு பணியாளர் வாரிய தலைவர் வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். 

தேசிய துப்புரவு பணியாளர் வாரியம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தலைவர் வெங்கடேசன் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர், துறை அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளரர்கள் - நலச்சங்களையும் சந்தித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன், "சென்னையில் நேற்றும் இன்றும் தூய்மை பணியாளர்கள் நலன் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். 
தூய்மை பணியில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இரண்டு முறை கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த ஒப்பந்த பணியாளர் முறையில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே லாபம் அடைகின்றனர். தூய்மை பணியில் ஒப்பந்த பணியாளர் முறையை ஒழித்து விட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். 

மேலும், இதுகுறித்து நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வரிடம் இரண்டு முறை கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. தமிழக அரசு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு அமைத்தது போல, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின்  பணிகள் குறித்து ஆராய ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றார்.