இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு சாலை மறியல்; போலீசார்  தடியடி!

Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட போது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் போலீசார்  தடியடி நடத்தியதால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசித்து வரும் அருந்ததியர் சமூக மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன் கோயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டக்காரர்கள் உடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால், ஆவேசம் அடைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால் இந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. 

இதனிடையே, மோதலில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்ட அருந்ததியர் இன மக்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com