ஊரக உள்ளாட்சி தேர்தல் - இன்று 2 இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு  

உள்ளாட்சி தேர்தலின்போது வாக்குச்சீட்டில் சின்னம் இடம் பெறாதது மற்றும் சாவடி மாறி வாக்காளர்கள் வாக்களித்தது ஆகிய காரணங்களால், இன்று 2 இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தலும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டில் தவறான சின்னம் பதிவாகி இருந்தது. இதனால் வாக்குச்சாவடி எண் 173-ல் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் 1-வது வார்டு உறுப்பினர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த வார்டுக்கான வாக்குச்சீட்டுகள், தவறுதலாக 2-வது வார்டுக்கு வழங்கப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த 2-வது வார்டுக்கும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. மொத்தம் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com