கள்ளச் சந்தையில் விற்பனை: ரேஷன் அரிசி மூட்டைகள் குவிண்டால் கணக்கில் பறிமுதல்..! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கள்ளச் சந்தையில் விற்பனை:   ரேஷன் அரிசி மூட்டைகள் குவிண்டால்  கணக்கில் பறிமுதல்..!  மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Published on
Updated on
1 min read

கடந்த ஜூன் மாதம் கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 440 சமையல் எரிவாயு உருளைகள், 200 கிலோ கோதுமை, 100 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 180-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குற்றச் செயலில் ஈடுபட்ட 593  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 01.06.2023 முதல் 30.06.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.49,41,826/- (ரூபாய் நாற்பத்தொன்பது  லட்சத்து நாற்பத்தொராயிரத்து எண்ணூற்று இருபத்தாறு மட்டும்) மதிப்புள்ள 3877 குவிண்டால்  பொது விநியோகத்திட்ட அரிசி, 

441 எரிவாயு உருளைகள், 201 கிலோ கோதுமை,  101 கிலோ துவரம் பருப்பு, 1997 லிட்டர் மண்ணெண்ணெய், 7 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 187 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. 

குற்றச் செயலில் ஈடுபட்ட 593  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com