உத்தர பிரதேச அரசைக் கண்டித்து சமாஜ்வாடி கட்சியின்ர் போராட்டம்!

உத்தர பிரதேச அரசைக் கண்டித்து சமாஜ்வாடி கட்சியின்ர் போராட்டம்!

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் யோகி ஆதித்யநாத் அரசைக் கண்டித்து, சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் 2 வது முறையாக சட்டமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர். உத்தரபிரதேச சட்டப்பேரவை கூட்டத் தொடரானது, கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க வலியுறுத்தியும், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியும், சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லக்னோவில் போராட்டம் நடத்தினர்.

வேலையில்லா திண்டாட்டம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் இந்த அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு திருப்திகரமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.  சுகாதார வசதிகள் இன்னும் மோசமான நிலையில் உள்ளன. எனவே, சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்கிறது என சமாஜ்வாடி தனது சமூக வலைதளத்தில் கருத்து

இந்த நிலையில் 2வது முறையாக சட்டமன்ற வளாகத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன பேரணி நடத்தினர். அப்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.

 

 

.