திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சனி பிரதோஷ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சனி பிரதோஷத்தையொட்டி, திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி, கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கொரோனா வழிபாட்டு நெறிமுறைப் படி, கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கோவிலின் வெளிப் பகுதியில் பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோன்று, காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் 59 டன் எடையுடன் ஒரே கல்லில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தி பெருமானுக்கு பால்,தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப் பட்டது. தொடர்ந்து, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.