நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மண்டல அலுவலகத்தில்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பைகள் தேக்கமா?

இதனால் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் ஏழில் உள்ள 1 1 வார்டுகளில்  சுமார் 132 டன் குப்பைகள் தேக்கமடையும் அபாயம்.இன்று மாலை சென்னை மாநகராட்சி மண்டலம் 7 க்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் பணிபுரியும் சுமார் 1682 தூய்மை பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி மண்டல 7 அலுவலகத்த்தில் 1மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் சாலை இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால்  காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்ததில் தூய்மை பணியாளர்கள் தாக்கப்பட்டதாகவும் மற்றும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

1.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டியும்.

2. 7. 1.2022 தேதி அன்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் படி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 18,4 10 உடனடியாக வழங்கிடவும்.

3.பெருநகர சென்னை மாநகராட்சியே ! மாண்புமிகு தமிழக முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது

பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியும்.

கடந்த 19.0 1.2 1 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு பல முறை உழைப்போர் உரிமை இயக்கம் 7 வது மண்டல தூய்மை பணியாளர்கள் 1682 ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் சார்பில்  மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று இரவு முதல் ஈடுபடவுள்ளனர்.

இதில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்  1457  பேர்,மலேரியா டெங்கு பணியாளர்கள் 225 பேர் என மொத்தம் 1682 ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட உள்ள நிலையில்

சென்னை மாநகராட்சி மண்டலம் 7ல் 1 வார்டுக்கு 12 டன் குப்பை வீதம்  1 1 வார்டுகளில்  132 டன் குப்பை தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்பொழுது தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.