அவர் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால்,... அவரை தான் உட்கார வைத்திருப்பேன்.! ஓபிஎஸ் குறித்து சசிகலா வேதனை.! 

அவர் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால்,... அவரை தான் உட்கார வைத்திருப்பேன்.! ஓபிஎஸ் குறித்து சசிகலா வேதனை.! 

ஓபிஎஸ் மட்டும் ராஜினாமா செய்திருந்திருந்தால், அவரைத்தான் முதல்வராக அமர வைத்திருப்பேன் என சசிகலா தனது 44ஆவது ஆடியோவில் பேசியுள்ளார்.

சசிகலா அண்மைக்காலமாக ஆடியோ அரசியலை நடத்தி வருகிறார். அவர் அமமுக, அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ எப்படியோ "லீக்" ஆகி விடுகிறது. இதுவரை அவர் 43 பேரிடம் பேசியுள்ள ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவில் புயலை கிளப்பி வருகிறது.

சசிகலாவிடம் பேசுவோர் கட்சியை விட்டு நீக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆரம்ப கட்ட ஆடியோக்களில் சசிகலா பொதுவான கருத்தையே பேசி வந்தார். அதாவது , தைரியமாக இருங்கள், கட்சியை சரி செய்துவிடலாம், நான் சீக்கிரம் வருகிறேன் என்ற ரீதியிலே பேசிவந்தார். அதன்பின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஈபிஎஸ்ஸுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே மோதல் என்பதை அறிந்த சசிகலா கட்சிக்குள் இவர்கள் சண்டையிடுவது வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அடுத்த ஆடியோக்களில் யார் நினைத்தாலும் தான் மக்களுக்கு நன்மை செய்வதை தடுக்க முடியாது என அதிமுகவினருக்கு சவால் விடுவதை போல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் 44ஆவது ஆடியோ வெளியானது.

அதில் நெல்லையை சேர்ந்த சிவனேசன் என்ற தனது ஆதரவாளரிடம் சசிகலா பேசுகையில் அதிமுக ஒரு ஜாதி ரீதியாக செயல்படுவதாக தொண்டர்களி புகார் கூறுகின்றனர். அதிமுக ஒரு பொதுவான கட்சி, ஒரு ஜாதி ரீதியாக செயல்படக் கூடாது எனத் தெரிவித்தார். 

மேலும், பன்னீர் செல்வம் அவ்வாறு (ராஜினாமா) செய்யாதிருந்திருந்தால் அவரை தான் உட்கார (முதல்வர்) வைத்திருப்பேன். அவராகவே அவ்வாறு செய்துவிட்டார். தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இருந்து தம்மிடம் தொண்டர்கள் பேசினாலும் கட்சியின் மீது ஒரே குறையை கூறுகின்றனர். எல்லா ஜாதிக்காரர்களும் அதையே கூறுகின்றனர். அவர்களை நான் கட்டுப்படுத்தியுள்ளேன்.

ஓரிருவர் சுயநலத்துக்காக தொண்டர்களை நீக்குகிறார்கள். தொண்டர்கள் நீக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற தான் வந்தே தீருவேன். அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது.கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது என்றார் சசிகலா.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com