தொண்டர்கள் நம்ம பக்கம் தான், ஊரடங்கு முடிந்து வருகிறேன்,. சசிகலாவின் அடுத்த ஆடியோவால் அரண்டுபோய் கிடக்கும் அதிமுகவினர்.! 

தொண்டர்கள் நம்ம பக்கம் தான், ஊரடங்கு முடிந்து வருகிறேன்,. சசிகலாவின் அடுத்த ஆடியோவால் அரண்டுபோய் கிடக்கும் அதிமுகவினர்.! 

கட்சி நிர்வாகிகள் பயத்தில் இருக்கிறார்கள் என்றும் தொண்டர்கள் நம்ம பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் சசிகலா கூறிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். ஆனால் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் தொடர் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது திருவாரூரை சேர்ந்த விஷ்வா கணேஷ் என்ற தொண்டரிடம் சசிகலா பேசும் வீடியோ வெளிவந்துள்ளது. அதில் "உங்கள பத்தி கட்சி நிர்வாகிகளே கண்டபடி பேசிகிட்டு இருக்காங்கம்மா அதை கேட்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" எனத் தொண்டர் கூற, அதற்கு "எல்லாம் பயத்துல ஏதேதோ பேசிகிட்டு இருக்காங்க. தலைவர் (எம்.ஜி.ஆர்.) மறைவுக்கு பிறகு அம்மாவை (ஜெயலலிதா) இப்படித்தான் கட்டம் கட்டி பேசிக்கிட்டு இருந்தாங்க.  

ஆனால் கடைசியில என்ன ஆச்சு. தொண்டர்கள் எல்லாரும் அம்மாகூட தான் நின்னாங்க.நினைச்சபடி அம்மா வந்தாங்க. அதனால பேசட்டும். பேசட்டும். இவங்க பேசுறதெல்லாம் பார்த்தா, தொண்டர்களோட எழுச்சிய பார்த்து பயந்து போயிருக்காங்கனு தான் எனக்கு தெரியுது. தொண்டர்கள் நம்ம பக்கம் தான் இருக்காங்க, பாத்துக்கலாம் ஊரடங்கு முடிஞ்சதும் நான் வந்துடுவேன் கவலையே படாதீங்க" என சசிகலா கூறியுள்ளார்.

இந்த ஆடியோ வெளியாகி அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஊரடங்குக்கு பிறகு வருவேன் என்று சசிகலா கூறியுள்ளதால் அதிமுக நிர்வாகிகளும் ஆடிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.