"இந்த 2 பெண்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்" நேரில் ஆஜரான சீமான் ஆவேசம்!!

Published on

தன் மீதான பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்துவரும் வீரலட்சுமி பொது மன்னிப்பு கோர வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜரானார். காவல்துறை விசாரணைக்கு பிறகு தனது மனைவியுடன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், திமுகவின் தூண்டுதல் பேரிலேயே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். நடிகை விஜயலட்சுமியால் தான் கடந்த 13 ஆண்டுகளாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார். தனக்கும், விஜயலட்சுமிக்குமான திருமணம் குறித்த முறையான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அப்போது அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் வீரலட்சுமி, பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மேலும், திருட்டுதனமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அப்போது அவர் உறுதிபடக் கூறினார். அப்போது, தனது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சீமானின் மனைவி கயல்விழி, இதனால் தனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை என்றார். 

முன்னதாக, சீமான் காவல் நிலையத்தில் ஆஜராக வந்தபோது, நாம் தமிழர் கட்சியினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com