எச்.ராஜாவின் கூட்டணி அழைப்பு "வாய்ப்பில்லை ராஜா" சீமான் பதில்!

எச்.ராஜாவின் கூட்டணி அழைப்பு  "வாய்ப்பில்லை ராஜா" சீமான் பதில்!
Published on
Updated on
1 min read

கூட்டணி குறித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் அழைப்பிற்கு, வாய்ப்பில்லை என சீமான் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் அவரிடம் தமிழக அரசு மகளில் உரமைத்தொகை பெறுவதற்கு விதிமுறைகள் வகுத்திருப்பதை பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சீமான், தமிழக அரசிடம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று தேர்தலுக்கு முன்பாக அறிவித்த அரசு, ஏன் தற்போது விதிமுறைகளை விதிக்கிறது? என கேள்வி எழுப்பினார். மேலும் பிச்சைக்காரியாக இருந்தால் தான் உரிமை தொகை, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நிலைக்கு அரசு தள்ளிவிட்டது என விமர்சித் அவர் நல்ல முறையில் இருந்தால் நாங்கள் ஏன் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை உங்களிடம் பெற போகிறோம் என விமர்சித்துள்ளார்.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்தின் காரணமாக தான் உயிரிழந்து உள்ளார். அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். கடந்த ஆறு மாத காலமாக அவர் பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். 6 மாத விடுமுறை கேட்டார்  கொடுக்கவில்லை. அந்த அழுத்தத்தின் காரணமாக தான் அவர் உயிரிழந்து உள்ளார் என குற்றம் சாட்டிய சீமான் இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டணிக்கு அழைப்பு விடுத்து எச். ராஜா அழைப்பு விடுத்தை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், "வாய்ப்பில்லை ராசா" என தனது வழக்கமான தோரணையில் கூறிய அவர், எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை என்பதுதான் எனது பதில் என தெரிவித்தார். தொடர்ந்து, நட்பு என்பது வேறு  அரசியல் நிலைப்பாடு என்பது வேறு எனக் கூறிய அவர், எச்.ராஜா என்னை அழைப்பது எங்களது வளர்ச்சியை காட்டுகிறது என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com