"கலைஞர் படிப்பகத்தை விட, கலைஞர் குடிப்பகம் பொருத்தமாய் இருக்கும்" சீமான் காட்டம்!!

Published on
Updated on
1 min read

கலைஞர் படிப்பகம் என்பதற்கு பதிலாக கலைஞர் குடிப்பகம் என்று வைத்தால் பொருத்தமாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் அரியலூர் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று தனியார் கூட்டுறவு நடைபெற்றது இக்க கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிறுவன சீமான் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பில் " மகளிர் உரிமைத் தொகை என்பது, வரவிருக்கும் தேர்தலுக்கான பணப்பட்டுவாடா. தாய்மார்கள் 1000 ரூபாய்க்கு கையேந்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது" என பேசியுள்ளார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு கலைஞர் உரிமைத்தொகை என பெயர் எதற்கு வந்துள்ளது? எனக் கேள்வியெழுப்பியதுடன், கலைஞர் பெயர் வைப்பதற்கு சரியான இடம் டாஸ்மார்க் தான் என்றும், கலைஞர் படிப்பகம் என்பதற்கு பதிலாக கலைஞர் குடிப்பகம் என்று பெயர் அமைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார். 

மேலும், எத்தனை தேர்தல் வந்தாலும், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் திராவிட கட்சிகள் இல்லாத மற்ற கட்சிகள் என்னுடன் வருமானால், கூட்டணி குறித்து யோசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com