பாலாஜியின் கண்டுபிடிப்பால் நான் தப்பித்தேன்... அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கர் வழங்க வேண்டும்!!செல்லூர் ராஜூ கிண்டல்

கரூர் செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் நான் தப்பித்தேன் என்றும் அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கரும், நோபலும் வழங்க வேண்டும் என செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.  
பாலாஜியின் கண்டுபிடிப்பால் நான் தப்பித்தேன்... அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கர் வழங்க வேண்டும்!!செல்லூர் ராஜூ கிண்டல்
Published on
Updated on
1 min read

மதுரை கோரிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் மாணவரனி கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாணவரனியினர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜுமுழுக்க முழுக்க மாணவர் சமுதயத்தை ஏமாற்றி திமுக அரசு அமைந்துள்ளதாக  குற்றச்சாட்டினார்.

 நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து இளைய சமுதாயத்தை, மாணவர் சமுதாயத்தை ஏமாற்றி திமுகவின் இளைய சூரியனாக காட்சி கொடுக்கும் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நீட்டை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக கடுமையாக விமர்சனம் செய்தார்.

 கடந்த சில தினங்களுக்கு முன் அணில் காரணமாக ஏற்படும் மின்தடை ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்துக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ஊடகங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து நான் தப்பித்தேன் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

 திமுக அமைச்சர்கள் என்னை விஞ்ஞானி எனக்கூறுவார்கள், ஆனால் தற்போது புதிய கண்டுபிடிப்பாக மின்சாரதத்துறை அமைச்சர் அணிலை கண்டுபிடித்துள்ளார். அவர் தான் உண்மையான விஞ்ஞானி என அமைச்சர் செந்தில் பாலஜியை கிண்டல் செய்தார்.எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின் மற்றும் இரும்பு கம்பிகளில் செல்கிறது. அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கார் விருது நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியை கிண்டல் செய்து பேசினார்.

 திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என சொன்னார்கள். மதுரையைசேர்ந்த நிதியமைசர் புது புது கண்டுபிடிப்பா சொல்கிறார். திமுகவை உண்மையான மான் என நினைத்து மக்கள் பொய் மானை கண்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com