ஜி.கே.வாசன் கட்சிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை... திமுகவுக்கு தாவும் முக்கிய புள்ளிகள்!!

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவிடம் வாங்கிய 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய தமாகவில் தற்போது உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கடந்த சில நாட்களாக அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகிறார்கள். இதையடுத்து, தேமுதிகவை போலவே வெளியேறும் இவர்களெல்லாம்  திமுக பக்கம் தாவ போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜி.கே.வாசன் கட்சிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை... திமுகவுக்கு தாவும் முக்கிய புள்ளிகள்!!

நடந்து முடிந்த தேர்தலில் தமாகாவுக்கு 2 சீட் தான் தருவதாக இருந்தது அதிமுக. ஆனால், 12 சீட் வேண்டும் என்று ஆடம் பிடித்ததால் இறுதியில் 6 தொகுதியை கொடுத்தது. இந்த 6 இடங்களில் யார் நிற்பது என்பதுதான் வாசன் கட்சிக்குள் போட்டி நிலவியது. ஒருவழியாக 6 தொகுதியை பங்குபோட்டுக்கொண்டு களமிறங்கியது தமாக, ஆனால் அந்த 6 தொகுதியிலுமே தமாக மண்ணை கவ்வியது. இதற்கு முன்பே சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியிலிருந்து முக்கிய புள்ளிகள் தமாகவிற்கு குட்பை கூட சொல்லாமல் எஸ்கேப் ஆனது ஜிகே வாசனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த தேர்தலில் வால்பாறை தொகுதி தனக்கு கிடைக்காததால் துணைதலைவராக இருந்த கோவை தங்கம் தமாகாவில் இருந்து விலகினார்.

வெளியேறிய உடனே அவர் திமுகவில் இணைந்தது ஜிகேவாசனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல, கோவை தங்கம் முன்னிலையில் ராம்குமார், அவரது ஆதரவாளர்களும் இணைவதாகவும் தகவல்கள் வெளியவந்தன. ய்தேப்பில ஞானசேகரனுக்கும் ஜிகே வாசனுடன் பிரச்சனை ஏற்பட்டது. காங்கிரசில் தமாகா இணைந்த போதும், வாசன் தனியாக தமாகாவை ஆரம்பித்த போதும், ஜிகே வாசனுடன் முக்கிய நபராக வலம் வந்தார்.

இவரும் கோவை தங்கத்தைப் போலவே சீட் தராதது காரணமாக இவரும் கட்சியில் இருந்து விலகி ஜிகே வாசனுக்கு ஷாக் கொடுத்தார். இவர்களைத் தொடர்ந்து தற்போது, மத்திய சென்னை மேற்கு மாவட்ட தமாகா தலைவர் அண்ணாநகர் ராம்குமாரும் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கடுப்பான ஜிகே வாசன் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டார்.

இதைவிட இன்னொரு ஹைலைட், பதவிகளை ராஜினாமா செய்துவரும் நிலையில், இவர்கள் எல்லாம் திமுகவில் இணைவார்கள் என்ற தகவலும் கசிந்து வருகிறது. ஏற்கனவே தேமுதிக கூடாரம் காலியாகிவரும் சூழலில் இபோது அதே பாணியில் தமாகவிலிருந்து வெளியேறி வருவது இவர்களது தலைமை பலமாக இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவும் கூட தேமுதிக, தமாக போன்ற கட்சிகளுக்கு பெருத்த சறுக்கலாகவே அமைந்துவிட்டது.