மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் அதிகமா...அமைச்சரின் கருத்து உண்மையா?

தமிழ்நாட்டில் மின்சாரத்தை பயன்படுத்தும் 2 கோடியே 37 லட்சம் மின்நுகர்வோர்கள் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் அதிகமா...அமைச்சரின் கருத்து உண்மையா?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் மிகவும் குறைவாக உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குறைவு

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்தை பயன்படுத்தும் 2 கோடியே 37 லட்சம் மின்நுகர்வோரில், ஒரு கோடி பேருக்கு எந்த கட்டணமும் இல்லை என்றார். சிறு குறு தொழிலாளர்களுக்கான மின்சார கட்டணம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின்சார கட்டணம் மிகவும் குறைவாக உள்ளதாக கூறினார்.

விசைத்தறிகளுக்கு கட்டணம் குறைவு

திருப்பூர், கோவையில் நடைபெற்று வரும் விசைத்தறி நெசவாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் விசைத் தறியாளர்களுக்கு கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது என்றார். மேலும், மின் திட்டங்களால் ஏற்படுள்ள கடன் சுமைகளுக்கு இடையே கடந்த 15 மாதங்களாக தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போது தெரிவித்தார்.