75ஆம் ஆண்டு சுதந்திர தினம்.... வண்ண விளக்குகளால் ஜொலித்த அரசு கட்டடங்கள்...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் முக்கிய கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
75ஆம் ஆண்டு சுதந்திர தினம்.... வண்ண விளக்குகளால் ஜொலித்த அரசு கட்டடங்கள்...

75-வது சுதந்திர தின விழா இன்று  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி தலைநகர் டெல்லியின் முக்கிய கட்டங்களான ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றம், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் சுதந்திர தின கொடியிறக்க ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இன்று சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் கொடியிறக்க நிகழ்வு  நடைபெற உள்ளது. இதையொட்டி அப்பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க விடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையின் நீர்வீழ்ச்சி மீது, ஜொலிக்கும் மூவர்ணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சி, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. மேலும், சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ அலுவலகமும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதே போல், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை, தலைமை செயலகங்கள், ஆளுனர் மாளிகை கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com