ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிவந்த பெண்களுக்கு 'வெள்ளி நாணயம்'...இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்!

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிவந்த பெண்களுக்கு 'வெள்ளி நாணயம்'...இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்!
Published on
Updated on
1 min read

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்து காவல் துறையினர் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். 


100 சதவீதம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண்கள் ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் ஒருபகுதியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே  வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஹெல்மெட் அணிந்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்களை காவல் துறையினர் நிறுத்தி இருக்கிறார்கள்.

அவர்கள் நாம் ஹெல்மெட் அணிந்து இருக்கிறோம் எதுக்கு நிறுத்துகிறார்கள் என தயக்கத்துடனே வண்டியை நிறுத்தியுள்ளனர். அப்போது திடீரென அந்த பெண்களுக்கு காவல் துறையினர் வெள்ளி நாணயத்தை பரிசாக அளித்து, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்டி வந்ததற்கு வாழ்த்துகள் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com