சிவசங்கர் பாபாவின் மனு தள்ளுபடி  - நீதிமன்றம்

சிவசங்கர் பாபாவின் மனு தள்ளுபடி - நீதிமன்றம்

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செயப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது. இந்நிலையில், வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com