பதவியை த க்கவைத்துக்கொள்ள சிலர் பேசுகின்றனர்...! கனிமொழி

பதவியை த க்கவைத்துக்கொள்ள சிலர் பேசுகின்றனர்...!  கனிமொழி

இன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு அவரது திருவுருவச்  சிலைக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 மற்றும் கருணாநிதி அமைச்சர் கீதா ஜீவன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்ளிட்டோரும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கனிமொழி எம்.பி.  அப்போது, 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கனிமொழி எம்பி யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர், "சில பேர் அரசியலில் அவர்களது நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான விஷயங்களை பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை", என்று பதிலளித்தார். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com