பயணிகளின் பயன்பாடு குறைவு காரணமாக தென் மாவட்டங்களில் இயக்கப்படும் சில இரயில்கள் ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட இரயில்களின் விவரம்;
1. ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு இரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16 வரை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி சிறப்பு இரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
2. ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு இரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16 வரை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு இரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
3. ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06729 மதுரை - புனலூர் சிறப்பு இரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு இரயில் ஆகியவை திருவனந்தபுரம் - புனலூர் இரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
4.. ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06127 சென்னை எழும்பூர் - குருவாயூர் சிறப்பு இரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16 வரை குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06127 குருவாயூர் - சென்னை எழும்பூர் சிறப்பு இரயில் ஆகியவை திருவனந்தபுரம் - குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது