மதுரையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை...!

மதுரையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை...!
Published on
Updated on
1 min read

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார்  மண்டபத்தில் வைத்து  காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 130 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர்  நெல்லை பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில் பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரனை நடைபெற்றது. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது.

100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் போது,  ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பாலியானவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பலியான குடும்பம் ஆறுதல் அடையவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com