” மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” உதயநிதிஸ்டாலின் வலியுறுத்தல்

” மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” உதயநிதிஸ்டாலின் வலியுறுத்தல்
Published on
Updated on
2 min read

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். 

அரியலூர் மாவட்டத்திற்கு அனைத்து துறை அலுலர்களுடன் ஆய்வு கூட்டத்திற்க்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்க்கு திடீரென சென்று பொது மக்களிடம் மனு வாங்கினார்.

அப்போது 2 வருடங்களாக மாற்று திறனாளி உதவித் தொகை வழங்க வேண்டும் என அழகிய மணவாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவசீலன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து இன்று அரியலூருக்கு வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தவசீலன் மனு அளித்தார். அப்போது தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்க பட்டது தெரியுமா என கேட்டபோது தெரியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து மனு கொடுக்க வந்த அழகிய மணவாளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த தவசீலன் என்ற மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க உத்திரவிட்டார். இதனையடுத்து வருவாய்த்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஆயிரத்து 735 பேருக்கு 10 கோடியோ 57 லட்சம்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வு செய்து வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com