பழமை வாய்ந்த புராதன சிலைகளை மீட்க நடவடிக்கை...! டிஜிபி தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம்..!

பழமை வாய்ந்த புராதன சிலைகளை மீட்க நடவடிக்கை...! டிஜிபி தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம்..!
Published on
Updated on
1 min read

பழமை வாய்ந்த புராதன சிலைகளை மீட்க சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு ஆய்வுக் கூட்டம், டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைப்பற்றப்பட்ட கோவில் சிலைகளை அந்தந்தக் கோவில்களில் ஒப்படைப்பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள  சிலைகள், முக்கிய சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்றவைகளும் விவாதிக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பழமைவாய்ந்த புராதன சிலைகளை பத்திரமாக மீட்டு தமிழகம் வருவதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com