சாதியால் பிரிவினை செய்கின்ற பாஜவிற்கு துணை....!!!

சாதியால் பிரிவினை செய்கின்ற பாஜவிற்கு துணை....!!!

சென்னை கிழக்கு மாவட்டம் 57வது வட்ட திமுக சார்பில் திரைவானம் போற்றும் தமிழ் வானம் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் யானைகவுணி பகுதியில் நடைபெற்றது.  

ஈரோடு வெற்றி:

அப்போது பேசிய ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு வெற்றிக்கு பிறகு ஸ்டாலின் 70 வது பிறந்த நாளில் நான் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஈரோடு தேர்தலில் நான் வெற்றி பெற்றேன் என்று சொல்லுவதை விட முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும் எனவும்  ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.  

சிறந்த முதலமைச்சர்:

மேலும் ஸ்டாலின் முதலமைச்சராக பதவிக்கு வந்த பிறகு பல சாதனைகளை செய்துள்ளார் எனவும்  இந்தியாவில் ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில யாரும் இத்தகைய சாதனைகளை செய்ய முடியாது எனவும் அதனால் தான் ஆங்கில பத்திரிகைகள் சிறந்த முதலமைச்சர் என்று கூறுகின்றன எனவும் பேசியுள்ளார்.

இனத்தின் ஆட்சி:

தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் நடைபெறுகிற ஆட்சி ஒரு கட்சி ஆட்சி அல்ல, ஒரு இனத்தின் ஆட்சி எனவும் ஒரு போர் வீரர் போல மக்களை காக்க வேண்டும் என்று பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் அசைக்க முடியாத ஆட்சியாக உள்ளது திமுக ஆட்சி எனவும் கூறியுள்ளார்.  

போடப்படும் திட்டம்:

மேலும் அதனை அசைக்க தான் ஒன்றிய அரசு திட்டம் தீட்டி வருகிறது எனவும் அதற்கு ஆளுநர் ரவி மற்றும் அண்ணாமலை தான் தூதுவர்கள் எனவும் அண்ணாமலைக்கு முதலமைச்சர் பாடம் புகட்ட வேண்டியது இல்லை எனவும் தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.  

துணைபோன அதிமுக:

அண்ணாமலை மட்டும் அல்ல அவருடன் சேர்ந்து அதிமுகவும் தமிழ்நாட்டில் காணாமல் போகும் எனவும் மதத்தால், சாதியால் பிரிவினை செய்கின்ற பாஜவிற்கு துணை போன காரணத்தால் தான் அதிமுக ஈரோடு  தேர்தலில் தோற்றது எனவும் எப்படியோ டெபாசிட் வாங்கியது அதிமுக என்பது தான் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விதைக்கப்படும் நஞ்சு:

அதனை தொடர்ந்து பேசிய அவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்று சாதாரணமாக இருக்க கூடாது எனவும் பாசிச கட்சிகளை எதிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  மேலும் புகைப்பட கண்காட்சியை நான் பார்த்தேன் எனவும் அனைவரும் அந்த கண்காட்சியை காண வேண்டும் எனவும் கூறிய அவர் மக்கள் மனதில் நஞ்சை விதைக்கின்ற மக்கள் விரோத கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணம் மோடி ஆட்சி தான் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com